தோஹா
நகரில் உள்ள
ஸ்டபட்
ஸ்ரீ லங்கன் பாடசாலைக்கு
விஜயம்
செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (25) பிற்பகல் தோஹா நகரில் உள்ள ஸ்டபட்
ஸ்ரீ லங்கன் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.
பொருள் ஈட்டும் நோக்கத்தோடு கடல் கடந்து சென்றுள்ள
இலங்கையர்களுக்கு மீட்சியளிக்கும் வகையில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த
பிள்ளைகளுக்கும் ஒரே நிழலில் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள தோஹா
ஸ்டபட் ஸ்ரீ லங்கன் பாடசாலை 17 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
அன்று முதல் சிறந்த கல்வியை வழங்கிவரும் இப்பாடசாலையில் தற்போது முதலாம் ஆண்டு
முதல் உயர் தரம் வரை கல்வி பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு
சுமார் 1300 மாணவர்கள் தற்போது கல்விகற்கின்றனர்.
பாடசாலையின் பேன்ட் வாத்தியக் குழுவினர் முன்னோக்கிச் செல்ல
மிக கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி, அம்மாணவர்களின் விபரங்களையும் கேட்டறிந்தார்.
0 comments:
Post a Comment