ஏலத்தில் விடப்படும் வைர ஹேண்ட்பேக்
உலகின்
மிக விலை
உயர்ந்த வைர
ஹேண்ட் பேக்
விரைவில் விற்பனைக்கு
வர உள்ளது.
டுபாயை சேர்ந்த
மவுவாத் என்ற
ஜூவல்லரி நிறுவனம்
4,500க்கும் அதிகமான வைரங்களை கொட்டி இதயம்
வடிவிலான இந்த
ஹேண்ட் பேக்கை
தயாரித்துள்ளது.
இதில்
105 மஞ்சள் நிற வைரமும், 56 இளஞ்சிவப்பு நிற
வைரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
18 காரட் தங்க
சங்கிலியில் ஹேண்ட் பேக் இணைக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு மதிப்பீட்டின் படி,
இதன் விலை
25 கோடி. ஏலத்தில்
பல மடங்கு
விலை உயரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்திற்கு முன்பாக ஹாங்காங், லண்டன், ஜெனிவா
பல உலக
நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. ஏலத்தேதி
விரைவில் அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment