புலமைப்
பரிசில் பரீட்சையில்
சித்தி பெற்ற மாணவர்களையும்
கற்பித்த
ஆசிரியர்களையும் மனதார பாராட்டுவதாக
அமைச்சர்
றிஷாட் தெரிவிப்பு
2017 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இவர்களுக்காக பாடுபட்ட ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மனதார
பாராட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“எமது நாட்டில் தேசிய மட்டத்தில் இடம் பெறுகின்ற
பரீட்சைகளில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையும் முக்கியமானதாகும். இந்தப்
பரீட்சைக்குத் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெறுகின்ற மாணவர்கள் சித்திப் பெற்றவர்களாக
கருதப்படுகின்றனர்.
இவர்களில் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற
வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சித்தி பெறுகின்றவர்கள் புலமைப்பரிசினை
பெறுபவர்களாகவும் மேலும் பிரபல்யமான பாடசாலைகளில் தரம் ஆறுக்கு
அனுமதிக்கப்படுவதற்கான தகுதி பெறுபவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
இதனடிப்படையில் இந்த பரீட்சையில் சித்தி பெற்ற
அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதே வேளை இவர்களுக்குக் கற்பித்த
ஆசிரியர்களுக்கும் பாடுபட்ட பெற்றோர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாவட்ட வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் தமது பிள்ளைகள்
சித்தி பெறவில்லையே என்று பெற்றோர்கள் ஆதங்கப்படாமல் தமது பிள்ளைகள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று
சித்திப்பெற்றுள்ளார்கள் என்ற அடிப்படையில் அவர்களைப் பாராட்ட வேண்டியது
முக்கியமானதாகும்.” இவ்வாறு
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment