பெண்ணின் பர்தாவை வலுக்கட்டாயமாக
கழற்ற சொன்ன பொலிஸார்
ஆஸ்திரியாவில் பெண் ஒருவரின் பர்தாவை பொலிஸார் வலுக்கட்டாயமாக
கழற்ற கூறி அதை சோதனை செய்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி
வருகிறது.
ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும்
மூடும் முகத்திரை அணிவதற்கான தடை இன்று நடைமுறைக்கு வந்தது.
இது ஆஸ்திரியாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாகவும், தலைமுடியில்
இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைகளான புர்கா
மற்றும் நிகாப்பிற்கு என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு இஸ்லாமிய குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,
அந்நாட்டின் ZellamSee என்ற கிராமத்தில் பெண் ஒருவர் புர்கா அணிந்திருந்தால், பொலிஸார்
அவரை வலுக்கட்டாயமாக கழற்றும்படி கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸார் அந்த பர்தாவை கழற்றிய பின்னரும் நன்றாக
உதறும் படி கூறியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தடை செய்யப்பட்டிருந்தாலும் பொலிஸார் இப்படி வலுக்கட்டாயமாக அப்பெண்ணின் பர்தாவை கழற்றும்
படி கூறியது கண்டனத்திற்குரியது என்று எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மேலும் மருத்துவ முகமூடிகளுக்கு, கோமாளி போல அலங்காரம் செய்வதற்கும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் சுமார் 150 பெண்கள் முழு முகத்தையும்
மூடும் முகத்திரை அணிகிறார்கள்.
இருப்பினும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், ஆஸ்திரியாவிற்கு
சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் 2011- ஆம் ஆண்டு முதல்
நிகாப் அணிய தடை விதித்துள்ளன. இதே மாதிரியான தடைக்கான நடவடிக்கைகள் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment