மருத்துவத்துக்கான
நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு
உயிரினங்களில்
வாழ்முறைக்கு உதவிடும் மரபணு பற்றிய கண்டுபிடிப்புக்காக
மருத்துவ துறைக்கான
நோபல் பரிசு
அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
.
இயற்பியல்,
மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய
துறைகளில் மகத்தான
சாதனை படைத்தவர்களுக்கு
ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், 2017-ம் ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல்
பரிசு பெறுபவர்
பெயர் இன்று
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்வீடன்
தலைநகர் ஸ்டாக்ஹோமில்
இன்று வெளியான
அறிவிப்பில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு
ஜெப்ரி சி.ஹால், மைக்கேல்
ரோஸ்பாஷ் மற்றும்
மைக்கேல் டபிள்யூ.
யாங் ஆகிய
அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின்
பரிணாம வளர்ச்சிக்கேற்பவும்,
பருவநிலை மற்றும்
வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடு
செய்யவும் மனிதர்கள்,
விலங்கினம், தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் இரவு
நேரங்களில் விழித்திருந்து வேலை செய்து தேவையான
புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை
வெற்றிகரமாக நடத்தியமைக்காக இவர்களுக்கு
இந்த விருது
கூட்டாக வழங்கப்படுவது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment