அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்
–ஜி.எல்.பீரிஸிடம் சம்பந்தன் கோரிக்கை
அப்பாவி
சிங்கள மக்களை
தவறாக வழிநடத்த
வேண்டாம் என்று
முன்னாள் அமைச்சரும்,
மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்
கொண்டுள்ளார்.
கொழும்பில்
நடந்த நிகழ்வு
ஒன்றிலேயே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் அவர்களும் அருகில்
அமர்ந்திருந்தார்.
புதிய
அரசியலமைப்பு தவறானது என்று அப்பாவி சிங்கள
மக்களை தவறாக
வழிநடத்தாதீர்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம், இரா.சம்பந்தன்
கேட்டுக் கொண்டார்
என்று, அமைச்சர்
ஹர்ஷ டி
சில்வா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் தாம்
இதற்கு சாட்சியாளர்கள்
என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான படம்
ஒன்றையும் அவர்
டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment