எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை
அரசின் முக்கியஸ்தர்களுக்கு அதிரடி படையினர் பாதுகாப்பு
தேர்தலை முன்னிட்டு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன்,மனோகணேசன், திகாம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலருக்கு விசேட அதிரடி படையினர் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசின் முக்கியஸ்தர்களான இவர்களுக்கு வேறு எந்த காரணத்திற்காகவும் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை மாத்திரமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோகணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் சாகர ரத்நாயக்க, சரத் பொன்சேகா, ராஜித்த சேனாரத்ன, தலதா அத்துகோரள, திலக்மாரப்பன, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஆகியோருக்கே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment