கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..
மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு!
முஸ்லிம் அரசியலுக்கு முகவரி வழங்க
மர்ஹூம் அஷ்ரப் அடித்தளமிட்ட நாட்களே
நினைவுக்கு வருவதாகவும் மக்கள் தெரிவிப்பு
கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சூறாவளி தேர்தல் பிரச்சார
நடவடிக்கைகளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அம்பாறை மாவட்டத்தில்
மருதமுனை முதல் பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர், சென்றல்
கேம்ப், அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, மீராவோடை, மஞ்சந்தொடுவாய்,
காத்தான்குடி வரையான அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று வேட்பாளர்களையும், வாக்காளர்களையும்
சந்தித்ததுடன் பல மேடைகளிலும் உரை நிகழ்த்தினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள்
மிகுந்த ஆரவாரத்துடனும், ஆர்வத்துடனும் அவரை வரவேற்றதை கண்ட போது மர்ஹூம்
அஷ்ரப் முஸ்லிம் அரசியலுக்கு முகவரி வழங்க அடித்தளமிட்ட நாட்களே நினைவுக்கு வருவதாக
மக்கள் தெரிவித்தனர்.
மு.காவின் கோட்டையாக கருதப்பட்ட அம்பாறை முஸ்லிம் பிரதேசத்துக்கு
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சென்ற போது, அங்குள்ள மக்கள் அவரை இன்முகத்துடன் வரவேற்றதை
காணக்கூடியதாக இருந்தது. ஒரு காலத்திலே மாற்றுக்கட்சிகளினால் இலகுவாக கூட்டங்களே
நடத்த முடியாதிருந்த முக்கிய கிராமங்களில் அமைச்சர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை
ஒரு வரலாற்று சிறப்புமிக்க அம்சம் என பலராலும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வாக்கு வேட்டைக்காக அங்கு
செல்லாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இந்தப் பிரதேசத்தில்
தமது கட்சிக்கு அரசியல் அதிகாரம் இல்லாத போதும், தமது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி
தம்மால் முடிந்தளவில் உதவிகளை நல்குவதாக வாக்களித்தார்.
இந்தத் தேர்தலை வெறுமனே சாதரணமான ஒரு தேர்தலாகக் கருதாமல் முஸ்லிம்
சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான
கேடயமாகவும், மக்கள் ஆணையாகவும் இந்தத் தேர்தலைக் கருதுமாறும், சமூகநலனில் அக்கறைகொண்டவர்களை
இனிமேலாவது இணங்கண்டுகொள்ளுமாறும் வேண்டினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்
பதியுதீனின் இந்த சூறாவளி பயணத்தின் போது அவருடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்
தலைவர் ஹசனலி, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா
மஹ்ரூப், இஷாக் ஆகியோரும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான
ஏ.எம். ஜெமீல் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள்
எதிர்கட்சித் தலைவர் ஹனீபா மதனி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸ்ஸாக்
(ஜவாத்), முன்னாள் பிரதேச சபை உறுபினர்களான அன்சில், தாஹிர் மற்றும் மக்கள் காங்கிரஸின்
உயர்பீட உறுப்பினர்களான, சிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.எம் ஜிப்ரி, உலமா கட்சித்தலைவர்
முபாறக் அப்துல் மஜீத், வடமாகாண மஜ்லிஸுஸ்
ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாறக் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகப்பிரிவு
0 comments:
Post a Comment