சீன உதவியுடன் சம்மாந்துறை, ஏறாவூர்,
பொத்துவில் உட்பட
13 மருத்துவமனைகள் அபிவிருத்தி
கல்முனைப் பிரதேசத்திலுள்ள
மருத்துவமனைகள் புறக்கணிப்பு
சீன
அரசாங்கத்தின் உதவியுடன் அரசாங்கம் சம்மாந்துறை, ஏறாவூர்,
பொத்துவில், ‘பேருவளை, அளுத்கம உட்பட 13 மருத்துவமனைகளை
அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித
சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சீன
அரசாங்கத்தின் 2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அபிவிருத்தி
செய்யப்பட்ட மீரிகம தள மருத்துவமனையில் நடந்த
நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை,
ஏறாவூர், பொத்துவில்,
‘பேருவளை, அளுத்கம,
, பொலன்னறுவ, பதவிய, வலஸ்முல்ல, கலவான, மகியங்கனை,
ரிக்கில்லாகஸ்கட, கராப்பிட்டிய ஆகிய மருத்துவமனைகளே சீனாவின்
உதவியுடன் அபிவிருத்தி
செய்யப்படவுள்ளன.
இது
தொடர்பான அமைச்சரவை
பத்திரமை் விரைவில்
சமர்ப்பிக்கப்படும்.” என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
சீனாவின்
உதவியுடன் அபிவிருத்தி
செய்யப்படவுள்ள மருத்துவமனைகளின் பட்டியலில் கல்முனை அஷ்ரப் ஆதார
வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment