ராஜபக்ஸக்களின் முகவரிகள்
வெலிக்கடை சிறையாக விரைவில் மாறும்!
அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு
ராஜபக்ஸக்களின் தங்காலை,
மெதமுலனை ஆகிய
இடங்களிலுள்ள முகவரிகள் வெகுவிரைவிலேயே வெலிக்கடை சிறைச்சாலையாக
மாறும் என
சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.
பேருவளை
கடற்கரை மைதானத்தில்
இடம்பெற்ற கூட்டமொன்றில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது
தொடர்ந்து உரையாற்றிய
அவர்,
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
யுத்தத்தை வென்றிருந்தாலும், அவர் மேற்கொண்டிருந்த ஊழல்
மற்றும் மோசடிகளால்
மக்கள் அவரைத்
தோற்கடித்தனர். அவர் கொள்ளையிட்ட பணங்கள் டுபாய்
வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அது
தொடர்பான தகவல்கள்
என்னிடம் உள்ளன.
இது மக்களின்
பணம்; அவர்களின்
பரம்பரை பணம்
அல்ல.
ராஜபக்ஸவினர் திருடிய
பணத்தை டுபாய்
வங்கியில் வைப்புச்
செய்துள்ளனர். நான்கரை பில்லியன் ரூபா பணம்
அங்கு வைப்புச்
செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக
தகவல்கள் என்னிடம்
இருக்கின்றன.
உக்ரைனிடமிருந்து
7.2 மில்லியன் டொலர்களைச் செலவிட்டு மிக் போர்
விமானங்கள் கொள்வனவுசெய்யப்பட்டன. எனினும்,
அது தொடர்பான
உடன்படிக்கையில் 14.7 மில்லியன் டொலர்
எனக் கூறப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ 7.5 மில்லியன் அமெரிக்க
டொலர்களைத் தரகுப் பணமாகப் பெற்றுள்ளார்.
இது
தொடர்பில் ஊடகவியலாளர்
லசந்த விக்கிரமதுங்க
எழுதினார். அதனால் அவரும் கொலைசெய்யப்பட்டார். மிக் விமான கொடுக்கல், வாங்கல்கள்
தொடர்பான சகல
ஆவணங்களும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஸவினரின் கொள்ளையடிப்புகள்
தொடர்பான விசாரணைகளை
முன்னாள் நீதி
அமைச்சரே தாமதமாக்கினார்.
அவருக்கு ராஜபக்ஸவினருடன் தொடர்பிருந்தது.
அவர் ராஜபக்ஸவினரின் ஊர்க்காரர்.
எப்படியாயினும் நாங்கள் விசாரணைகளைத் துரிதப்படுத்துவோம். விசாரணைகளின் முடிவல் ராஜபக்ஸக்களின் முகவரிகள் வெலிக்கடை
சிறைச்சாலையாக மாறும்'' - என்றார்.
0 comments:
Post a Comment