உள்ளூராட்சித் தேர்தல் 2018
தபால் மூல வாக்களிப்பு
அன்பின் அரசாங்க உத்தியோகத்தர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் !
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது
நாளை, 22 ஆம் திகதி பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்களிப்பில் கலந்து கொள்கிறீர்கள் .
எமது உடன்பிறப்புக்களாகிய
நீங்கள் எந்தக் கட்சிக்கு, எந்த வேட்பாள நபருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கக் கூடும். இன்னும் விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையிலும் இருப்பீர்கள்.
மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர், தலைமைப் பொறுப்பேற்று சுமார் 17 வருடங்களாகியும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், கைகட்டி பேசாமடந்தையாக சமூகத்தைப் பற்றி சிந்திக்காத தலைமையாகவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்னும் இருக்கின்றது.
முஸ்லிம்களின் வாக்குகளை ஏலமிட்டு வக்கில்லாத அரசியலை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கென தோற்றுவிக்கப்பட்ட சமூகக் கட்சி, தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக இன்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ளது. இது நமக்குத் தேவைதானா? இதுதான் இந்நாட்டு முஸ்லிம்களின் விதியா?
வாக்குறுதிகளை வழங்கிய பிறகு அவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வந்து மக்களை உணர்வூட்டி, வாக்குகளைக் கொள்ளையடித்துச் செல்வதை இவர்கள் ஒரு கலாச்சாரமாக்கி விட்டனர்.
முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்பி நீங்கள் ஆண்டாண்டுகாலமாக வாக்களிக்கும் தலைவர், உறுதிமொழிகளை மட்டுமே தந்தாரே ஒழிய, இன்னும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் மானத்தோடும், கௌரவமாகவும், தலைநிமிர்ந்து வாழவும், எமக்கெதிரான அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும் எமது கட்சியை ஆதரிக்குமாறும், எமது பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும் உருக்கமாக உங்களை வேண்டுகின்றோம்.
முஸ்லிம் சமுதாயத்தின் தற்போதய
நிலைமையைச் சிந்திக்கும் மக்கள் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலைக்கு இன்று வந்துள்ளனர் மக்களின் இந்த எதிர்பார்ப்பை சகல மாவட்டங்களிலும்
எம்மால் அவதானிக்க முடிகிறது.
நாட்டின் அரசமைப்பு மாற்றப்படும் போது நமக்குப் பேரழிவுகள் காத்திருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல் முறை மாற்றப்பட்டுவிட்டது. தேர்தல் முடிய நாடாளுமன்றத் தேர்தல் முறை மாற்றப்படப் போகிறது. இம்மாற்றங்களால் சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர் அரசியலுக்கோ எவ்வித பாதிப்புமில்லை ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் என்ற ஒன்றே இல்லாது செய்யப்பட்டுவிடும்
அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும். இதில் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷையில் அணுவளவாயினும் நிறைவேற வாய்ப்பில்லை.
எனவே உடன் பிறப்புக்களே! அமபாறை, திருக்கோணமலை, குருநாகல், களுத்துறை மற்றும் கண்டி
மாவட்டத்தில் வாழும் அரச ஊழியர்களாகிய நீங்கள் தபால் வாக்குகளை எமது சின்னமான மயில் சின்னத்திற்கு வழங்கி, உண்மையான மாற்றத்திற்கும், திடமான சமூக ஒற்றுமைக்கும் ஆணை தருமாறு உங்களைஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அன்பாய் வேண்டுகின்றது.
ஊடகப்பிரிவு
0 comments:
Post a Comment