இது எப்படியிருக்கிறது?

வன்முறைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்

தவத்தின் தலைமையில் மேல் அங்கியை நீக்கி

நடத்தப்பட்ட ஒரு புதுமையான போராட்டம்.


முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தவம் அவர்களின் தலைமையில் சிலரால்  மேல் அங்கியை நீக்கி நடத்தப்பட்ட ஒரு புதுமையான போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது
அக்கரைப்பற்றில் சில அரசியல்வாதிகள் வன்செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்களைக் கைது செய்யக் கோரியுமே இவர்களின் இந்தப் போராட்டமாம்.

குறிப்பு :- ஒரு முறை அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நோன்பு திறக்க செல்ல முடியாத நிலையில் அந்த ஊரில் வன்செயல்கள்  அதிகரித்துக் காணப்பட்டது உண்மைதான் அந்தக் காலத்தில் இந்தப் போராட்ட தலைவர்தான் அதிகாரத்தில் இருந்தாராம். 
வன்செயல்களை எதிர்ப்பதற்கு வன்முறையாளர்களின் பாணியிலேயே போராட்டம் செய்வதற்கும் எல்லோருக்கும் துணிவு வராது உணமையிலேயே தகுந்தவர்களால் வன்முறையாளர்கள் எப்படியான தோற்றத்தில் இருப்பார்கள் என்பதை இவர்களின் சட்டைகள் களையப்பட்ட போராட்டம் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது என மக்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top