புதிய ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு

30,500 மாணவர்களை அனுமதிப்பதற்கு உத்தேசம்


இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பத்திரங்கள், மாணவர்களுக்கான கையேடுகள் அடுத்தவாரம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

2017ஆம் ஆண்டு நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு 163,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு, சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் புதிதாக மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த இரண்டு மருத்துவ பீடங்களுக்கும், இந்த ஆண்டு சுமார் 150 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

ருகுணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு மேலதிகமாக 10 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டு மருத்துவபீடங்களுக்கு 160 மாணவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மொத்தமாக மருத்துவபீடங்களுக்கு 1,476 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.


களனி பல்கலைக்கழகத்தில் புதிதாக, பொறியியல் பீடமும், நிதியியல் கற்கைகள் பீடம் என இரண்டு அலகுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பீடங்களுக்கு சுமார் 50 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top