மஹிந்த ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரித்த
ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற
மோசமான செயல்கள்
குறித்து விசாரிக்க
நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி
அறிக்கை இன்று
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
பல்வேறு
ஊழல், மோசடிகள்
தொடர்பாக நடத்தப்பட்ட
விசாரணைகள் குறித்த 1000 பக்கங்களைக் கொண்ட இந்த
அறிக்கையில், எதிர்காலத்தில் எவ்வாறு இத்தகைய மோசடிகளைத்
தடுப்பது மற்றும்
பெரியளவிலான ஊழல் மோசடிகளை எவ்வாறு கையாள்வது
என்பது குறித்த
பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின்
தலைவரான மேல்முறையீட்டு
நீதிமன்ற நீதிபதி
பத்மன் சூரசேன இந்த அறிக்கையை இன்று
ஜனாதிபதியிடம் கையளிப்பார்.
இந்த
ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 34 பிரதான ஊழல், மோசடிகள்
குறித்து விசாரணைகளை
நடத்தியிருந்தது.
அம்பாறையில் நடத்தப்பட்ட தேசத்துக்கு மகுடம் குறித்த அறிக்கை, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிக்கை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறித்த அறிக்கை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை அறிக்கை, ரூபவாஹினி கூட்டுத் தாபனம் தொடர்பான அறிக்கை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை பற்றிய அறிக்கை, சதோச தொடர்பான அறிக்கை என்பனவும் இதில் அடங்குவதாக அறிய வருகிறது.
0 comments:
Post a Comment