'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தின் கீழ்
70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது
– கல்வி அமைச்சு தெரிவிப்பு
'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை அனுகூலங்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தின் கீழ் எவரும் விரைவாக அனுகூலம் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர் ஒருவர் இரண்டு இலட்சம் ரூபா காப்பீட்டைப் பெறுகிறார். இதில் மருத்துவ காப்பீடு, வைத்தியசாலை வசதிகள் போன்றவையும் உள்ளடங்கும்.
'சுரக்ஷா' காப்புறுதித் திட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனுகூலங்கள் கோரி இரண்டாயிரத்து 200ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் காப்புறுதி அனுகூலங்களாக 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment