பள்ளிவாசல்
நிர்வாக சபையை கலைக்கும் அதிகாரம்
தேர்தல்
ஆணைக்குழுவுக்கு இல்லை.
மஹிந்த
தேசப்பிரிய தெரிவிப்பு
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் உட்பட நாட்டில் உள்ள எந்தவொரு மதஸ்தலங்களின்
நிர்வாக சபைகளை கலைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கெப்பிட்டல் எப்.எம்.ரேடியோவின் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது
அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தை
தேர்தல் ஆணையாளர் கலைக்கவுள்ளார் என அண்மையில் இறக்காமத்தில் வைத்து முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக
மேற்படி செய்திச் சேவை வினவியபோதே இந்த பதிலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபைக்காக சுயேட்சையாகப் போட்டியிடும்
குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றாலும் சபையில் அமரமுடியாது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருக்கும்
கருத்து தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த
தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்,
ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட எவரையும் எவராலும் தடுக்கமுடியாது
எனவும் கெப்பிட்டல் எப்.எம்.ரேடியோவின் செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment