மயிலும் --- ! மரமும் -----!!
மயிலால் கன தூரம் பறக்க
முடியாது. எழும்பினால் அது தொப்பொன விழும் இவ்வாறு மு.கா தலைவர் ஹக்கீம் கடந்த 5
ஆம் திகதி நிந்தவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் சின்னம் குறித்து
பேசுகையில் தெரிவித்துள்ளார்.
மு.கா. தலைவர் ஹக்கீம் அவர்களின் இக்கூற்று பற்றி
காடுகளில் உள்ள பறவைகளின் குணங்கள் அறிந்த ஒரு முதியவர் தெரிவித்த விபரம் வருமாறு,
மயில் பறக்க எழும்பி அதிக தூரம் பறக்க
முடியாவிட்டாலும் அது தொப்பொன விழுந்த இடத்திலிருந்து
மீண்டும் அசுர வேகத்தில் பறக்க எழும்பிவிடும்
பார்க்கப்
பார்க்க அலுக்காத
ஆச்சர்யங்களில் ஒன்று மயில். தோகை விரித்து
ஆடும் மயிலின்
அழகுக்கு மயங்காதவர்கள்
இல்லை
அதிக
ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண
நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை
ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல்
மூலம், புலி
போன்ற ஆபத்தான
விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
பிறந்து
ஒரு நாளே
ஆன மயில்
குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க
ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும்
செய்யும்.
ஆண்
மயிலின் வண்ணமயமான
தோகை, , பிற
விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை
விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.
ஆனால், மரமோ பட்டுப்போனால் மீண்டும் துளிர் விடுவது அபூர்வம். பட்டுப்போனது
பட்டுப்போனதுதான்.
பாரிய மரம் சாய்ந்துபோனால் நிமிர்த்தவும் முடியாது என அந்த முதியவர் மு.கா.
தலைவர் ஹக்கீமின் கருத்துக்கு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment