அரசியல் விமர்சகர் எம்.எச்.எம்.இப்றாஹிமின்

ஒரு பதிவு

நான் இதனை பதிவிடக்கூடாது இருந்தாலும் இதனைச் சொல்லவேண்டிய நிலையில் உள்ளேன்.!

நான் ஒரு அரசியல் விமர்சகராக இருப்பதன் காரணமாக சிலபேர் என்னை சொல்லுகின்றார்கள் நான் பணம் வாங்கிக்கொண்டுதான் எழுதுகின்றேன் என்று. அல்லாஹ்வின் உதவியால் எனக்கு பணம் ஒரு பொருட்டேயல்ல, நான் நினைத்தால் அரசியலுக்கு வரமுடியாதவனும் அல்ல, என்னை அரசியலுக்குள் இழுப்பதற்கு பலபேர் முயற்சித்த போதெல்லாம் நான் அதற்கு மறுத்துவருபவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ள எனக்கு பணத்துக்காக சோரம் போகவேண்டிய அவசியமில்லை.

நான் சமூகத்துக்காக பல சேவைகளை செய்துவருகின்றேன், எனது பகுதி ஏழைமக்களுக்காக எனது வீட்டின் கதவு திறந்தே இருக்கும், பொது விடயங்கள் என்றால் நான் பின்னிற்பதுமல்ல அதற்காக பல அவமானங்களை சந்தித்துமுள்ளேன்.

உதாரணமாக..எங்கள் ஊர் பள்ளிவாசலில் நடந்த ஒரு ஊழல் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வரை சென்று வாதாடி நீதியை பெற்றுக்கொடுத்தேன் அதற்காக பல லட்சங்களை செலவு செய்தவன், இன்றும் செய்து கொண்டிருப்பவன். இன்றும் அது சம்பந்தமான வழக்கு அப்பீல் நீதிமன்றத்திலும், வக்பு சபையிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.

இந்தப்பிரச்சினையில் நான் சம்பந்தப்பட்டதன் காரணமாக பல அபாண்டங்களை என்மீது சுமத்தினார்கள் அதே போன்று எனது வீட்டையும் தாக்கினார்கள், அதனால் பல வழக்குகளுக்கு முகம் கொடுத்து வெற்றியடைந்தேன். இதெல்லாம் எனது பகுதி இளைஞர்களுக்கு நன்றாகவே தெறியும்.

அதே போன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிறையவே உதவிகள் செய்துள்ளேன். அது சம்பந்தமான ஒரு தகவலை நான் உங்களோடு பகிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்...நான் சுனாமியால் பாதிக்கப்படவில்லை இருந்தாலும் எங்கள் பகுதி ஜீ.எஸ் எனது பகுதியையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சகல உதவிகளையும் எனக்கு வழங்க முற்பட்டபோது அதனை நான் மறுத்தேன்.

சுனாமியால் தாயை இழந்து, பிள்ளையை இழந்து, சொந்தம் பந்தம் வீடு வாசல் அத்தனையும் இழந்து நிற்கும் ஒருவன் பெரும் அதே நிவாரணத்தை, பாதிக்கப்படாத நானும் பெறுவதென்றால் அவன் மனிதனாகவே இருக்கமாட்டான் என்ற காரணத்தினால் ஒரு நிவாரணத்தைக்கூட பெற்றுவிடக்கூடாது என்று எனது குடும்பத்தாருக்கு கடுமையான கட்டளை பிறப்பித்தேன்.

சில பேர் என்னிடம் கூறினார்கள் வெள்ளைக்கார்ட் கிடைத்தால் அது செய்யலாம் இது செய்யலாம் என்றார்கள் அதனையெல்லாம் விட்டெறிந்து விட்ட போது...கல்முனை டி..எஸ் என்னை நேரில் அழைத்து பாராட்டியது மட்டுமல்ல எனக்கு நற்சான்றிதலும் வழங்கி கௌரவித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டார்...சில பணக்காரர்கள் கூட பாதிக்கப்படாமல் இருந்துகொண்டு எனக்கும் வெள்ளைக்கார்ட் தாருங்கள் என்று கேட்டு எங்களது உயிரை எடுக்கின்றார்கள் ஆனால் இவருக்கு நாங்கள் கொடுத்தும் அதனை ஏற்க மறுக்கின்றார் என்றால் இவரை நான் பாராட்டாமல் இருக்கமுடியாது ஆகவே எனது பதவியை விட்டு விட்டு இப்படிப்பட்ட நல்லவர்கள் பின்னால் சென்றாலும் புண்ணியம் கிடைக்கும் என்று பலபேர் முன்னிலையில் பேசினார்.
இதனை நான் துளியளவும் எதிர்பார்க்க வில்லை இருந்தாலும் அதனை நான் பெருமையாக ஏற்றுக்கொண்டேன்.
இது ஒரு சிறிய விடயம்தான் இருந்தாலும் அந்த நேரம் அந்த விடயம் பெரிதாகவே பேசப்பட்டது.

இதே போன்று நிறைய விடயங்களை அல்லாவுக்காக நான் செய்துள்ளேன்... மறைந்த தொப்பி முகைடீன் எம்பி அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வாதாடி நியாயம் பெற்ற சம்பவங்கள் ஊர்மக்களுக்கே தெறிந்த விடயம். அதற்காக பல லட்சங்களை நஸ்டஈடாகவும் பெற்றவன் நான். இதெல்லாம் நடந்தது அவர் பவரோடு இருந்தபோதுதான்.

இப்படி பல விடயங்களை நான் கண்டவன் கண்டுகொண்டு இருப்பவன் அப்படிப்பட்ட என்னை சாதாரணமாக இடைபோட்டுக் கொண்டு மற்றவர்களைப்போல் என்னையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை...




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top