இன்று …………….. !
இலச்சினைகள் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம்!
நாளை ……………. !!
கட்சி முக்கியமல்ல ஆசனங்களே முக்கியம்!!
இலச்சினைகள் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம்’ என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இவரின் இக்கருத்து குறித்து,
அமைச்சர் ஹக்கீமுக்கு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள
நிலமைகளைப் பார்க்கும்போது கட்சி எமக்கு முக்கியமல்ல எப்படியாவது ஆசனங்களைப் பெறுவதுதான்
முக்கியம் என்று கூறுவார் போல் தெரிகின்றது என முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப கால போராளிகள்
கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காகவும் இச்சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும்
அரசியலில் பேரம் பேசுவதற்கு மு.கா கட்சியையும் மரச் சின்னத்தையும் உருவாக்க உயிர்களைப்
பறிகொடுத்தும் சொல்லொன்னா கஸ்டங்கள் பட்டும் பெற்றெடுத்திருந்தார்.
அப்படியான கட்சியின் சின்னம் இன்று முக்கியமல்ல என்று கட்சியின்
தலைவர் பேசும் நிலைக்கு கட்சியின் வல்லமையை குறைத்துவிட்டார் எனவும் மக்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அக்கட்சி பல இடங்களில் மறக்கடிக்கப்பட்டு வெவ்வேறு சின்னங்களில்
போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது ஒரு துர்ப்பாக்கிய நிலை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..
முஸ்லிம் காங்கிரஸின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர்
மெளலானா பிரநிதித்துவப்படுத்தும் ஏறாவூரில் கட்சி ஆதரவாளர்களை ஒன்றுபடுத்த முடியாமல் இரண்டு அணிகளாகப் பிரிந்து வெவ்வேறு சின்னங்களில் அதாவது தராசு சின்னத்திலும் யானைச்
சின்னத்திலும் போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதும் சமுதாயம் சிந்திக்க வேண்டிய
முக்கிய விடயமாக உள்ளது.
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும், சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றது..
“அதேபோன்று மட்டக்களப்பு மாநகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் வாகரை பிரதேச சபை போன்ற இடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றது.
காத்தான்குடியில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இன்று …………….. !
இலச்சினைகள் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம்! என்று பேசுபவர்
நாளை ……………. !!
கட்சி முக்கியமல்ல ஆசனங்களே முக்கியம்!! என்று
பேசமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகத்தின்
கேள்வி..
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment