அஷ்ரபின் போட்டோவை போட்டு

மக்களை விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

துரோகம் செய்த அரசியல்வாதிகளை

வாக்குப் பலத்தால் துரத்தியடியுங்கள்.

சாய்ந்தமருதில் அமைச்சர் பைஸர் முஸ்தபா


மர்ஹும் அஷ்ரப் என்னுடைய தகப்பனோடு இணைந்துதான் அரசியல் செய்தார். இப்படி இவர்கள் போன்று அன்னார் அரசியல் செய்யவில்லை. இன்று அஷ்ரபின் போட்டோவை போட்டு மக்களை விற்றுக்கொண்டிருக்கின்றனர்நான் சொல்கின்றேன் அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை விரட்டுங்கள். என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று 2018.01.18 ஆம் திகதி மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபா தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
சில அரசியல்வாதிகள் மேடையில் சாறன் கட்டிக்கொண்டு நாடகமாடி அரசியல் செய்து விற்றுப் பிழைக்கும் பணத்தில் கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.
இங்குள்ள அரசியல்வாதிகளே சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை கிடைப்பதற்கு தடையாகவும் இருந்தனர் 
சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகளை உங்கள் வாக்குப் பலத்தால் துரத்தியடியுங்கள்.
எனக்கு இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், நான் ஒன்று சொல்கின்றேன் உங்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றியவர்களை துரத்திவிடுங்கள், இவர்கள் மக்களின் வாக்குகளைப் பெற்று சமூகத்தை விற்கின்றனர். உன்மையாகச் சொல்கின்றேன் நான் அரசியல் செய்வது அல்லாஹ்வுக்காகத்தான்.
நான் சாய்ந்தமருதுக்கு வருகை தந்து தனியான பிரதேச சபை தருவதாக வாக்களித்தேன். அதற்குபிறகு கல்முனை மக்கள் வந்து சிக்கல் வரும் நான்காகப் பிரிக்கவேண்டும் என்று சொன்னார்கள் சாய்ந்தமருது மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் துரோகி என்று நான் இந்த மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியுடன் நான் இதுகுறித்து பேசினேன் கட்டாயமாக சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தருவதாக அவர் சொன்னார்.
நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை, ஆனால், மக்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு வாக்களித்துவிடாதீர்கள். சிலர் முஸ்லிம் சமூகத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். எம்மைப் படைத்த அல்லாஹ்வை ஏமாற்றி விளையாட முடியாது.

நீங்கள் வாக்களிப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு உங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள். இவ்வாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top