மு.கா. உறுப்பினர் சல்மான்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்

பதவியிலிருந்து இராஜினாமா



முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எம்.எச்.எம். சல்மான், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமனம் பெற்றார்.


குறித்த பதவிக்கு மு.கா.விலிருந்து மற்றுமொருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top