நம்பகத்தன்மை மிகுந்த செய்திகளுக்கு
முன்னுரிமை அளிக்க பேஸ்புக் முடிவு
பேஸ்புக்
பக்கத்தில் பதிவாகும் நம்பகத்தன்மை மிகுந்த செய்திகளுக்கு
முன்னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி மார்க்
ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல
செய்தி நிறுவனங்களும்,
இதழாளர்களும் தங்களது படைப்புகளை பேஸ்புக், டுவிட்டர்
உள்ளிட்ட சமூக
வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றின் வழியாக
தங்களது இணையதளத்துக்குள்
வாசகர்களின் வருகை அதிகரிப்பதால் அனைத்து செய்திகளும்
இப்படி பரிமாறப்படுகின்றன.
இவற்றில்
சில செய்திகள்
சமூக முக்கியத்துவம்
வாய்ந்ததாகவும், சில செய்திகள் போலி வதந்திகளாகவும்
இருப்பதால் பலவேளைகளில் உண்மைக்கு நாலுகால், பொய்க்கு
பத்துகால் என்பதுபோல்
போலி செய்திகள்
வெகுவேகமாக பரவி எதிர்வினையான தாக்கத்துக்கும், இதுதொடர்பான கருத்து மோதல்களுக்கும் வழிவகுத்து
விடுகிறது.
எனவே,
பேஸ்புக் பக்கத்தில்
பதிவாகும் நம்பகத்தன்மை
மிகுந்த செய்திகளுக்கு
முன்னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி மார்க்
ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக,
தனது பேஸ்புக்
பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் ஜுக்கர்பர்க், ‘எந்த
செய்திகள் அதிகமாகவும்,
பரவலாகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது தொடர்பாக
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின்
கருத்தை அறிந்து,
அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், உணர்வுகளை
தூண்டிவிடும் பொய் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி இது’ என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment