தபால் மூல வாக்களிப்பு நாளை 22 ஆம் திகதி ஆரம்பம்
இம்முறை சுமார்
560,000 அரச ஊழியர்கள்
தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி
உள்ளூராட்சித்
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது
என்று தேர்தல்
ஆணைய பணிப்பாளர்
நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.
நாளை,
22 ஆம் திகதி பொலிஸ் நிலையங்கள், பிரதேச
செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில்,
தபால் மூல
வாக்குகளை அளிக்க
முடியும்.
ஏனைய
அரச நிறுவனங்களில்
தபால் மூல
வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் இடம்பெறும். தபால்
மூல வாக்களிப்பை கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்க முடியாது
எனினும்,
சுயேட்சைக்குழுக்களின் அல்லது அரசியல்
கண்காணிப்பு அமைப்புகள் வாக்களிப்பை பார்வையிட முடியும்.
இம்முறை
சுமார் 560,000 அரச
ஊழியர்கள் தபால்
மூலம் வாக்களிக்கத்
தகுதி பெற்றுள்ளனர்.” என்றும்
அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment