இன்று திறக்கப்படவுள்ள
பொல்கஹவெல மேம்பாலம்
பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்துக் காரணமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட மணித்தியாலங்கள் பொல்கஹவெல வீதி மூடப்படுவதனால், வாகன நெரிசல் ஏற்படுவதன் காரணமாக இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 353 மீற்றர்களாகும். இதன் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment