உள்ளுராட்சி மன்ற தேர்தல் :
உடல்வலிமையிழப்பிற்குட்பட்ட நபர்களுக்கு
விசேட போக்குவரத்து
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடல்வலிமையிழப்பிற்குட்பட்ட நபர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு உரிமை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த வசதிக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 7 நாட்கள் முன்னதாக அதாவது பெப்ரவரி மாதம் 3ம் திகதி அல்லது அதற்கு முன்னதாகவோ தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பிட்ட நபரினால் அல்லது அவரது சார்பில் வேட்பாளரல்லாத ஒருவரினால் பிரதேச தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் இதற்கான விண்ணப்பப்பத்திரத்தைக் கையளிக்க முடியும்.
தாம் உடல்வலிமை இழப்பிற்கு உட்பட்டவர் என்பது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வைத்திய சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்படுமாயின், அது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள தெரிவத்தாட்சி அதிகாரிக்கு வசதியாக அமையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான விண்ணப்ப மாதிரி இன்று வெளியான தேசியப்பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment