ஊவா மாகாண சபை முதலமைச்சரை கைது செய்யுமாறு

பதுளையில் ஆர்ப்பாட்டம்

மாகாண சபையின் முன்னால் கலகத் தடுப்பு பொலிஸார்

பதுளை தமிழ் பெண்கள் மகா வித்தியாலயத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பாடசாலையின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண சபை முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவாதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் ஆசிரியர்கள, ஊழியர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (22) காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாண அரசாங்க ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாடசாலையின் முன்னால் ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டாக்காரர்கள், முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, அவரது செயலாளர் சந்த்யா அம்பன்வல, கல்வி பணிப்பாளர், ரத்னாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபையின் முன்னால் கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top