ஒரு வருடத்திற்கு முன்---!

வட்டமடு பிரச்சினையை அறிய

அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம்

பிரச்சினையை இன்னும் தீர்க்கவில்லை என

விவசாயிகள் கவலை!!


திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயக் காணிகளில் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் இருக்கின்ற காணி தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு வட்டமடு விவசாயிகளுடன் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

ஆனால், ஒரு வருடமாகியும் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இப்படித்தான் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் மக்களின்  பிரச்சினைகள்  தீர்க்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் அவர்களால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு தீர்க்கப்படாமல் அப்படியே காணப்படுவதாக மக்கள் குறை தெரிவிக்கின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top