தேசிய பாடசாலை அனுமதியில் மனித உரிமை மீறல்
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
தேசிய
பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் படையினர், காவல்துறையினர்,
மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி
முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல்
என்று மனித
உரிமைகள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம,
இந்த சிறப்பு
முன்னுரிமைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.
‘இலங்கை
படையினர், காவல்துறையினர்,
மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கான அனுமதியின்
போது அளிக்கப்படும்
சிறப்பு முன்னுரிமை, சமூகத்தின்
ஏனைய பெற்றோர்
மற்றும் பிள்ளைகளின்
மனித உரிமைகளை
மீறுவதாக உள்ளது
சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் அளிக்கப்படும் இந்த முன்னுரிமை, அரசாங்கத்தின்
அனுசரணையுடன் இடம்பெறும் மனித உரிமை மீறலாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment