தேர்தலை இலக்காகக்கொண்டு நடாத்தப்படும்

பிரச்சார கூட்டத்திற்கான புதிய சட்ட விதிகள்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நடாத்தப்படும் பிரசார கூட்டத்திற்கு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 400 மீற்றர் உட்ப்பட்ட பகுதியை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தோறணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் கூட்டம் நடைபெறும் பகுதிக்குள் மாத்திரமே இடம் பெறவேண்டும். நீண்டகாலத்திற்கு கட்டவுட் காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்கும் தேர்தலுக்காக பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் சட்டம் மீறப்படுவது தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது தேர்தல்; ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டு கொண்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு சட்ட விரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீதும் இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் செலவில் விநியோகிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்தவற்றை ஒட்டுவதற்கான அறிவிப்பு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவரேனும் தேர்தல் விதி முறைகளை மீறும் குற்றச்சாட்டு இருக்குமாயின் அவற்றை சமூக இணைத்தளங்களில் வெளியீடுவது அல்ல பொலிஸாருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top