சம்மாந்துறை தொகுதியில்

ரணிலின் விக்கட்டை வீழ்த்தினார் மைத்திரி



திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த எம்.ஏ. ஹசன் அலி தமது ஆதரவை அவருக்கு வழங்கியுள்ளார்.
ஊழல் மோசடிகளற்ற தூய்மையான அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி  ஆதரவாளர்களின் எண்ணங்கள்,அபிலாஷைகள் எதனையும் கருத்தில் கொள்ளாது கட்சியின் தலைமைபீடம் முஸ்லிம் காங்கிரஸோடு தேர்தல் கூட்டை வைத்துக்கொண்டு வருவதால் தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் புறந்தள்ளப்பட்டு வருவதாகக் கூறி பெரும் எண்ணிக்கையான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வேறு கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு முன் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top