நற்பிட்டிமுனைக்கு வரலாற்று துரோகம்
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்
மக்கள் போராட்டத்தில் குதிப்பு
கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்படுவதைத் தடுத்தாகக் கூறி நற்பிட்டிமுனை பொதுமக்களால் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு எதிராக கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனையில்
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்னால் கூடிய
மக்கள் தமது
எதிர்ப்பை வெளியிட்டார்கள்.
பல்வேறு
கோஷங்களை எழுப்பியும்,
பல வாசகங்கள்
பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர் என அங்கிருந்து
கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“நற்பிட்டிமுனைக்கு பிரதி மேயர்
கிடைக்கவிருந்த சந்தர்ப்பத்தை உனது அரசியல் இலாபத்திற்காக முன்னின்று தடுத்த
சுயநலவாதி ஹரீஸ். உனக்கு எங்கள் மண் இனி எதிரிதான்“
“நற்பிட்டிமுனை மண்ணுக்கு வரலாற்று துரோகம்
செய்த அரை அமைச்சர் ஹரீஸே! உமது கபடத்தனத்திற்கு எதிரான எமது கண்டனம்“. என்பன போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
மேயர்
பதவிக்கு முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர்
ஒருவர் போட்டியிட்டபோது, தமிழர் விடுதலைக்
கூட்டணி அவருக்கு
ஆதரவு வழங்காத நிலையில் ஹென்றி
மகேந்திரனுக்கு தங்கள் ஆதரவை வழங்கியது.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் உறுப்பினர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த சகல் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப் அவர்கள் மேயராகத்
தெரிவு செய்யப்படுவதற்கு வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் பிரதி
மேயர் பதவிக்கு
போட்டியிட்ட நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினருக்கு
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள் ஆதரவளிக்கத் தவறி வரலாற்று துரோகம் ஒன்றை செய்துவிட்டனர் எனக் கண்டித்தே
நற்பிட்டிமுனை மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment