ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார்
பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் பலர் உயிரிழந்தருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள சாலை ஒன்றை கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று சாலையை கடக்கவிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர் என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எத்தனை பேர் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், மக்கள் கூட்டத்தின் மீது மோதியதும் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தான் என்பதால் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment