கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில்
ஆங்கில பாடத்தில் 51.12 வீத மாணவர்களே சித்தி


கடந்த டிம்பர் மாதம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் 51.12 வீத மாணவர்கள் மாத்திரமே, ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்று பரிட்சைத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில், ஆங்கில பாடத்திலேயே மாணவர்கள் குறைந்தளவில் சித்தி பெற்றுள்ளனர்.
ஆங்கில பாடத்திற்கான பரிட்சையில்  296,157 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 151,393 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர்.
ஆங்கில பாடத்தில் 31,619 மாணவர்கள் அதி சிறப்புச் சித்தியையும், 19,822 மாணவர்கள் சிறப்புச் சித்தியையும், 39,717 மாணவர்கள் திறமைச் சித்தியையும், 60,235 மாணவர்கள் சாதாரண சித்தியையும் பெற்றுள்ளனர் என்றும் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top