150,000 பசுக்களை கொல்ல
நியூசிலாந்து அரசு திட்டம்
   
நியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா நோயை தடுக்கும் வகையில் 150,000 மேற்பட்ட பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. நியூசிலாந்தில் மொத்தம் சுமார் 66 லட்சம் பசு மாடுகள் உள்ளன.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாவினால், உணவு பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால், பண்ணைகளில் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களை கொன்று, எரிக்கவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
  
பசுக்கள் கொல்லப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இது போன்ற பசு ஒழிப்பு நடவடிக்கையை யாரும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாட்டில் உள்ள 2000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும், என்று தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top