ஆசிரியர்களுக்கான
வெற்றிடங்களை நிரப்புவதற்கு
பட்டதாரிகளை
இணைத்துக்கொள்ள நடவடிக்கை
தேசிய பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி
ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு
கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளை தொழில் வாய்புக்களில் இணைத்துக் கொள்வதற்கான
வேலைத் திட்டத்தின் கீழ், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தில் அபிவிருத்தி உதவியாளர், திட்டமிடல், நிதி முகாமையாளர் மற்றும் அபிவிருத்தி
அதிகாரிகளாக நியமனம் பெற்று கல்வி அமைச்சிலும், திணைக்களங்கள், தேசிய பாடசாலைகள், கல்வியல் கல்லூரிகளிலும் பணியாற்றும்
பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
தேசிய பாடசாலைகளில் ஆறு அல்லது 11 வருடங்களாக நிலவி வரும் வெற்றிடங்களுக்கு
இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
பாடசாலையை அடிப்படையாக இந்த வெற்றிடங்களுக்காக இணைத்துக்
கொள்ளப்படுவார்கள் என்பதனால், எட்டு வருட காலத்திற்கு இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியாது.
இதற்கு மேலதிகமாக தேசிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள
மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையில் 3/01(அ) தரத்தில் இணைத்துக் கொள்வதற்காக போட்டிப்
பரீட்சை நடத்தப்படும். இது தொடர்பான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இது குறித்த மேலதிக விபரங்கள் நேற்று முன்தினம் வெளியான
அரசாங்க வர்த்தமானி அறிவித்திலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment