.பொ.. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும்
மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்


கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
சில அதிபர்கள் அடையாள அட்டையை பெற்றுகொள்ள தேவையான மாணவர்களின் விண்ணப்பங்களை இதுவரையில் தமது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு 350,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.இருப்பினும் தேசிய அடையாள அட்டையை பெற்றுகொள்வதற்காக 60 சதவீதமான மாணவர்களின் விண்ணப்பங்களே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பல இருப்பதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை பெற்றுகொள்வதற்காக இறுதி நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஆட்பதிவு திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கூடிய விரைவில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top