மீண்டும் டெங்கு நுளம்பு பெருகக்கூடும் அபாயம்
பொதுமக்கள் விழிப்புடன் சுற்றாடல் தொடர்பில்
கவனம் செலுத்தவேண்டும்


இந்த வருடத்தின் முதல் 5 மாத காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஆறு இலட்சத்து 80 ஆயிரம் சுற்றாடல் பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.
இவற்றில் சுமார் 50 சதவீதமானவை சுற்றாடல் பகுதிகள் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழைக்குப் பின்னர், மீண்டும் டெங்கு நுளம்பு பெருகக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் விழிப்புடன் தமது சுற்றாடல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றி கலந்து கொண்டபோதே தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹசித திசேரா இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் அனில் திசாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
மழைக்குப் பின்னர், கிணற்று நீரைப் பயன்படுத்த முன்னர், கிணற்றை குளோரிட்டு சுத்தம் செய்யவேண்டும்.
இதற்காக பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் அனில் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 மழை காலத்தில், கொதித்தாறிய நீரை அருந்த வேண்டும். அதேபோன்று, காய்கறி மற்றும் பழ வகைகளை சுத்தப்படுத்தி, சமையலுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top