கர்ப்பிணி
ஆசிரியைகளுக்கான
இலகுவான
ஆடை அறிமுகம்
பாடசாலைகளில் கடமை புரியும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான
இலகுவான ஆடை இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அதற்கான சுற்று நிருபமும்
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க
அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் வைத்தியர்களின்
அறிவுரைகளுக்கு அமைய உடலுக்கு மிகவும் இலகுவான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில்
அணியும் சந்தர்ப்பம் இதனூடாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2 இலட்சத்து 36 ஆயிரம் ஆசிரியகள்
கடமையாற்றுவதாகவும் அதில் 1இலட்சத்து 72 ஆயிரம் பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில்
சுமார் 10,000 பேர் வருடந்தோறும் கர்ப்பம் தரிப்பதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இந்த எளிமையான ஆடையை அணிய
முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment