துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட
கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது
கொழும்பு
நகரின் புதிய
வரைபடம் நேற்று
நிலஅளவைத் திணைக்களத்தினால்
அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்
புதிய வரைபடத்தில், கொழும்பு
துறைமுக நகரம்,
அதிவேக நெடுஞ்சாலைகள்,
கொழும்பு நகரப்
பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள
ஏனைய அபிவிருத்தித்
திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று,
நில அளவையாளர்
நாயகம் உதயகாந்த
தெரிவித்துள்ளார்.
புதிய
வரைபடத்தின்படி, கொழும்பு நகரின் பரப்பளவு, 474.5 ஹெக்ரெயரினால்
அதிகரித்துள்ளது.
இலங்கையின்
புதிய வரைபடத்தை
தயாரிக்கும் பணி, 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மொத்தம்,
92 பகுதிகளாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதில், 72 பகுதிகளை வரையும் பணிகள்
முடிந்து விட்டன.
எஞ்சிய
பகுதிகள் நிறைவு
செய்யப்பட்டு, இந்த அண்டு இறுதிக்குள், இலங்கையின்
முழுமையான வரைபடம்
வெளியிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment