குற்றவாளியாக இனங்காணப்பட்டார்
பொதுபல சேனாவின்
அமைப்பின் பொதுச் செயலாளர்
ஞானசார தேரர்
ஊடகவியலாளர்
பிரகீத் எக்னலிகொடவின்
மனைவி சந்தியா
எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமைக்காக பொதுபல சேனாவின் அமைப்பின் பொதுச்
செயலாளர், ஞானசார
தேரர் ஹோமாகம
நீதவான் நீதிமன்றால்
குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்கு நீதிமன்றம் வருகை தந்திருந்த நிலையில்
சந்தியா எக்னலிகொட நீதிமன்ற வளாகத்தில் வைத்தே ஞானசார தேரரினால்
அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி
ஹோமாகம நீதி மன்றத்தி இடம்பெற்றிருந்தது.
குறித்த அச்சுறுத்தல், நிதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பின்னர் அவருக்கு
எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்றைய வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
நீதிமன்ற நடைமுறையின் பிரகாரம்
ஞானசார தேரரை அடையாளம் காணுதல் மற்றும் தண்டனை
அறிவித்தல் என்பன எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment