ஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட
மக்கள் விடுதலை முன்னணியின் யோசனை கையளிப்பு



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி (JVP) கையளித்துள்ளது.
இன்று 25 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரிடம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவினால் குறித்த யோசனைகள் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு காலம் தாழ்த்த வேண்டிய தேவை இல்லை எனின், இரண்டு அல்லது மூன்று மாத காலத்தினுள் அதனை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதியன்று ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top