கல்முனை பிரதேச நலனில்
அக்கறையுள்ளவர்களின் ஆதங்கம்
கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்தி நோக்கமாக துறைசார் அமைச்சர்கள்
எவரும் இப்பிரதேசத்திற்கு அழைத்து
வரப்பட்டு மக்களுடன் உரையாடுவதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் எவரும் நடவடிக்கை
எடுப்பதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பானம், மட்டக்களப்பு பிரதேசங்களுக்கு துறைசார் அமைச்சர்கள் அடிக்கடி
விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடிக்
கொடுப்பதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைப்பதும், திறந்து
வைப்பதுமாகச் செயல்படுகின்றனர்.
ஆனால், கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருட காலமாக துறைசார் அமைச்சர்கள்
எவரும் இங்கு விஜயம் செய்து இப்பிரதேச மக்களின் விவசாயம், கடற்றொழில், கல்வி, போன்ற
விடயங்கள் தொடர்பாக பொதுமக்களோடு கலந்துரையாடவுமில்லை. துறைசார் அமைச்சர்கள்
எவராலும் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுமில்லை, திறந்து வைக்கப்படவுமில்லை என பிரதேச நலனில்
அக்கறையுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள்
கல்முனை பா.உ. கேட்
முதலியார் M.S.காரியப்பர் அவர்கள் 1952ம் ஆண்டு உள்விவகார
அமைச்சர் Sir ஒலிவர் குணதிலகவைக் கொண்டு சாய்ந்தமருது
மத்திய மருந்தகத்தைத்
திறந்து வைத்தார்.
1957 இல் மகப்பேற்று
மனைக்கான அத்திவாரத்தை
சுகாதார அமைச்சர்
விமலா விஜயவர்தனவைக்
கொண்டு நடவைத்தார்.
மர்ஹும் எம்.ஸி.அஹமது அவர்கள் கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக
இருந்த போது அன்று கல்வி அமைச்சராக இருந்த மர்ஹும் அல்-ஹாஜ் பதிஉத்தீன் மஹ்மூத் அவர்களை
இப்பிரதேசத்திற்கு அழைத்து கெளரவித்ததன் காரணமாக இங்கு மஹ்மூத் மகளிர் கல்லூரி ஒன்று
உருவாக்கப்பட்டு இன்று இப்பிரதேச முஸ்லிம் பெண்களின் கல்வியில் முன்னேற்றத்தைக் காணமுடிகின்றது.
பல குடும்பங்கள் இன்று பெண்களின் கல்வி முன்னேற்றத்தால் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இது மாத்திரமல்லாமல்
மர்ஹும் அல்-ஹாஜ் பதிஉத்தீன்
மஹ்மூத் அவர்களின் இப்பிரதேசத்திற்கான விஜயத்தின் மூலம் இங்குள்ள பல பாடசாலைகளின் சில
தேவைகள் அவரின் அதிகாரத்தின் மூலம் அன்று பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.
மர்ஹும் எம்.ஸி.அஹமது அவர்கள் அன்று பிரதமராக இருந்த சிறிமாவோ
பண்டாரநாயக்க அவர்களைக்கூட கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தார்.
இது போன்று மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அன்று கல்முனைப் பிரதேச மீனவர்களின்
பிரச்சினைகளை துறைசார் அமைச்சருக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அப்போதய அரசாங்கத்தில்
கடற்றொழில் அமைச்சராக இருந்த பெஸ்டஸ் பெரேரா அவர்களை கல்முனைக்கு அழைத்து வந்து கல்முனை
மீனவர் சங்கத் தலைவர் எம்.சி. ஆதம்லெவ்வை தலைமையில் கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து
கொடுத்தார்.இதன்மூலம் மீன்பிடி அமைச்சர் இப்பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை அறிந்து
கொள்ள முடிந்ததுடன் மீனவர்களும் அந்த அமைச்சருடன் தொடர்பு வைத்து பிரச்சினைகளுக்குத்
தீர்வு காண வழி ஏற்பட்டது.
அது மாத்திரமல்லாமல் அன்று காணி, நீர்பாசன அமைச்சராக இருந்த காமினிதிஸநாயக்கவை கல்முனைக்கு அழைத்து வந்து இப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை விவசாயிகள் மூலமாகப் புரிய வைத்தார்
அது மாத்திரமல்லாமல் அன்று காணி, நீர்பாசன அமைச்சராக இருந்த காமினிதிஸநாயக்கவை கல்முனைக்கு அழைத்து வந்து இப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை விவசாயிகள் மூலமாகப் புரிய வைத்தார்
மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனை
பொது நூலகத் திறப்பு விழாவுக்கு அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீது அவர்களை அழைத்து வந்து திறக்கவைத்து அவரைக் கெளரவித்தார். இதன் மூலம் அமைச்சர்
ஏ.ஸி.எஸ்.ஹமீது அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை வைத்துக்கொள்ளக்கூடிய
வாய்ப்பு உண்டாக்கப்பட்டது.
ஏ.ஆர்.மன்சூர் அவர்களால் கல்முனைப் பிரதேசத்திற்கு ஆர்.பிரமதாஸ சுகாதார அமைச்சர் ரஞ்சித் அத்தப்பத்து, அமைச்சர் எம்.எச் முஹம்மது
போன்றவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.
இது மாத்திரமல்லாமல் கல்முனைப் பிரதேசத்திற்கு என்றுமில்லாதவாறு
ஒரே நாளில் 15 அமைச்சர்கள் விஜயம் செய்த வரலாறும் உள்ளது. மயோன் முஸ்தபா பாராளுமன்ற
உறுப்பினராக இருந்த சந்தர்ப்பத்தில்தான் இது நடந்தது.
ஆனால், இன்று துறைசார் அமைச்சர்கள் கல்முனைப் பிரதேசத்திற்கு
வருகை தருவதில்லை. அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதில்லை, திறந்து
வைப்பதுமில்லை. இதற்கு காரணம் துறைசார் அமைச்சர்கள் கல்முனைப் பிரதேசத்திற்கு வருவதற்கு
விருப்பம் இல்லையா? அல்லது இங்குள்ள அரசியல்வாதிகள் அமச்சர்களின் வருகையை விரும்புவதில்லையா? இல்லை இவர்களிடம் இதற்கான சமார்த்தியம் ( Talent) போதாதா என பிரதேச நலனில் அக்கறையுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment