2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்
01. இலங்கையில் '1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம்
கட்டத்தினை செயற்படுத்துதல் (விடய இல. 10)
இலங்கையில்
'1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம் கட்டத்தினை நாடு
முழுவதும் செயற்படுத்துவதற்கு
யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்காக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத்
தருவதற்கு இந்தியா
அரசாங்கம் இணக்கம்
தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 1990 சுவசெரிய
மன்றத்தினை ஆரம்பிக்கும் வரை அவ் அம்பூலன்ஸ்
சேவையின் இரண்டாம்
கட்டத்தினை செயற்படுத்துவதற்கு உரிய வரிச் செலவுகளை
தமது அமைச்சினால்
பொறுப்பெடுப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள்
அமைச்சர் எனும்
ரீதியில் கௌரவ
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. நடுத்தர வருமானம் பெறுகின்ற வீட்டு
கடன் யோசனை
திட்டம் தொடர்பில்
2018ம் ஆண்டின்
யோசனைகளை செயற்படுத்துதல்
(விடய இல.
12)
முதல்
தடவையாக வீடொன்றினை
கொள்வனவு செய்கின்ற
நடுத்தர வருமானம்
பெறுகவோருக்கு தனியார் பிரிவினரால் செயற்படுத்தப்படுகின்ற வீடமைப்பு வேலைத்திட்டங்களில்
இருந்தும் வீடுகளை
கொள்வனவு செய்வதற்கான
வழிவகைகளை ஏற்படுத்திக்
கொடுக்கும் வகையில் நடுத்தர வருமானம் பெறுகின்ற
வீட்டு கடன்
யோசனை திட்டத்தினை
விரிவுபடுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள்
அமைச்சர் எனும்
ரீதியில் கௌரவ
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில்களுக்கான
யப்பான் நன்கொடை
நிகழ்ச்சித்திட்டம் (விடய இல.
13)
அரச
பிரிவின் நிறைவேற்று
அதிகாரிகளுக்காக யப்பானின் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைகழகமொன்றில் முதுமானி பட்டப்படிப்பினை
தொடர்வதற்காக 2010 ஆண்டில் மனித
வளங்கள் அபிவிருத்தி
புலமைப்பரிசில்களுக்கான யப்பான் நன்கொடை
நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தின் ஊடாக இதுவரை
135 அதிகாரிகள் தமது மேற்படிப்பினை பூர்த்தி செய்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின்
வேண்டுகோளிற்கிணங்க இந்நிகழ்ச்சி திட்டத்தினை
அடுத்து வருகின்ற
04 வருடங்களிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு யப்பான் அரசாங்கம்
இணக்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அடுத்து வருகின்ற ஒவ்வொரு வருடத்திலும்
முதுமானி பட்டப்படிப்பிற்கான
புலமை பரிசில்கள்
நான்கும், கலாநிதி
பட்டப்படிப்பிற்கான புலமைப்பரிசில்கள் இரண்டும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை
செயற்படுத்துவதற்கு தேவையான 265 மில்லியன்
யப்பான் யென்
தொகை நன்கொடையினை
பெற்றுக் கொள்வதற்காக
யப்பான் சர்வதேச
ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது
தொடர்பில் தேசிய
கொள்கைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள்
அமைச்சர் எனும்
ரீதியில் கௌரவ
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. கலமெடிய மீன்பிடி துறைமுக நிர்மாணிப்பின்
மூலம் பாதிக்கப்படுகின்ற
செய்ன் மீனவர்களுக்கு
சலுகையளித்தல் (விடய இல. 15)
கலமெடிய
மீன்பிடி துறைமுக
நிர்மாணிப்பின் மூலம் அப்பிரதேசத்திலுள்ள
28 செய்ன் மீனவர்களும்
அவர்களிடத்தில் தங்கி வாழ்கின்ற 644 பேரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் குறித்த
மீனவர்களின் வருடாந்த வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியினை காணலாம். அதற்காக அவர்களுக்கு
பணத்தினால் நட்ட ஈட்டினை வழங்குவதற்கு பதிலாக
7.8 மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க 36 அடி நீளமான
பல நாள்
படகு இயந்திரங்களை
பெற்றுக் கொடுப்பதற்கு
முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள
28 மீனவர்களுக்கும் வௌ;வேறாக
குறித்த படகுகளை
பெற்றுக் கொடுப்பதற்கும்,
அம்மீன்பிடி படகுகளுக்கான செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கத்தின்
மூலம் மேற்கொள்வதற்குமாக
நிதி மற்றும்
ஊடகத்துறை அமைச்சர்
கௌரவ மங்கள
சமரவீர அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ஒரு சேவை கவுன்டரின் ஊடாக
சேவை வசதிகளை
செயற்படுத்துவதற்கு முடியுமான வகையில்
சுங்க கட்டளை
சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல.
17)
வியாபார
நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ஒரு சேவை கவுன்டரின்
ஊடாக சேவை
வசதிகளை செயற்படு;;த்துவதற்கு முடியுமான
வகையில் சுங்க
கட்டளை சட்டத்தினை
திருத்தம் செய்வதற்கு
முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுங்க
கட்டளைகள் சட்டத்தினுள்
உள்ளடக்கப்பட வேண்டிய முன்மொழியப்பட்டுள்ள
திருத்தங்களை உள்ளடக்கி சட்டமூலம் ஒன்றினை வரைவதற்காக
சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில்
நிதி மற்றும்
ஊடகத்துறை அமைச்சர்
கௌரவ மங்கள
சமரவீர அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. இலங்கையில் துறைமுகங்கள் உட்பட கரையோர
வலயங்களினுள் கழிவு முகாமைத்துவம் (விடய இல.23)
இலங்கையில்
துறைமுகங்கள் உட்பட கரையோர வலயங்களினுள் கழிவு
முகாமைத்துவம் செய்வதற்காக கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் கரையோர
வலய கழிவு
முகாமைத்துவ குழுவொன்றினை நியமிப்பதற்கும்,
கடற்கரையினை அசுத்தப்படுத்துகின்ற நபர்களுக்கு
எதிராக டெங்கு
ஒழிப்பு சட்டம்,
தேசிய சூழலியல்
சட்டம் மற்றும்
சமுத்திர சுற்றாடல்
மோசடிகளை தடுக்கும்
சட்டம் ஆகியவற்றின்
உறுப்புரைகளை கடுமையான முறையில் செயற்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்குமாக
மகாவலி அபிவிருத்தி
மற்றும் சுற்றுச்சூழல்
அமைச்சர் எனும்
ரீதியில் அதிமேதகு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்கள்
மற்றும் முன்னாள்
மீன்பிடி மற்றும்
நீரியல் வளங்கள்
அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த
ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. பொதுமக்களுக்கு துரிதகதியில்
காணி உரித்துகளை
பெற்றுக் கொடுக்கும்
தேசிய வேலைத்திட்டம்
(விடய இல.
25)
அரசாங்கத்தினால்
முன்னெடுக்கப்படுகின்ற பொதுமக்களுக்கு துரிதகதியில்
காணி உரித்துகளை
பெற்றுக் கொடுக்கும்
தேசிய வேலைத்திட்டத்தின்
கீழ் பொலன்னறுவை,
மொனராகலை, காலி
மற்றும் அநுராதபுரம்
ஆகிய மாவட்டங்களில்
வசிப்பவர்களுக்கு காணி உரித்துகளை பெற்றுக் கொடுக்கும்
பிரதான நிகழ்ச்சிகள்
ஏற்பாடு செய்யப்பட்டன.
எஞ்சிய 21 மாவட்டங்களுக்குமான
பிரதான நிகழ்வுகளையும்,
ஒரு மாவட்டத்தில்
03 எனும் விதத்தில்
பிராந்திய நிகழ்வுகளையும்
2018ம் ஆண்டு
மே மாதம்
முதல் டிசம்பர்
மாதம் வரையிலான
காலப்பிரினுள் ஒழுங்கு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் மற்றும்
பிரதேச மட்டத்தில்
அந்நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்காக காணி ஆணையாளர் நாயக
திணைக்களத்துக்கு மேலதிக திறைசேரி நிதியினை ஒதுக்கிக்
கொள்வது தொடர்பில்
காணி மற்றும்
பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த
கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. பெருந்தோட்ட
பிரதேசங்களுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார
சபையொன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 27)
பெருந்தோட்ட
பிரதேசங்களுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார
சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கு அவசியமான அவகாசங்களை வழங்கி
தயாரிக்கப்பட்டுள்ள, பெருந்தோட்ட வலயங்களுக்கான
புதிய கிராமங்கள்
அபிவிருத்தி அதிகார சபை சட்ட மூலத்தினை
அரசாங்க வர்த்தமானியில்
பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை
பெற்றுக் கொள்வதற்காக
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மலைநாட்டு
புதிய கிராமங்கள்,
அடிப்படை வசதிகள்
மற்றும் பிரஜைகள்
அபிவிருத்தி அமைச்சர் கௌரவ யு. பழனி
திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. புகையிரத குறுக்கு வீதி பாதுகாப்பு
பிரிவினை பெற்றுக்
கொடுத்தல், பொறுத்துதல், பரிட்சித்து பார்த்தல் மற்றும்
கொண்டு நடாத்துதல்
ஆகியவற்றுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் (விடய இல.
34)
இரட்டை
புகையிரத குறுக்கு
வீதிகளுக்காக பாதுகாப்பு பிரிவுகள் 25 இனையும், ஒற்றை
புகையிரத குறுக்கு
வீதிகளுக்காக பாதுகாப்பு பிரிவுக்ள 175 இனையும் பெற்றுக்
கொடுத்தல், பொறுத்துதல், பரிட்சித்து பார்த்தல் மற்றும்
கொண்டு நடாத்துதல்
ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தினை உரிய பயிற்சியினையும் வழங்கும்
அடிப்படையில் M/s N-Able (Pvt) Ltd. M/s மற்றும் Uni Consultancy Services ஆகிய நிறுவனங்கள் இணைந்து
உருவாக்கிய கூட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தும் போது
ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு
அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் கால
எல்லையினை 12 மாதங்களினால் நீடிப்பதற்கு போக்குவரத்து மற்றும்
சிவில் விமான
சேவைகள் அமைச்சர்
கௌரவ நிமல்
சிறிபால டி
சில்வா அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. தடயவியல் கணக்காய்வுஃ பரிசீலனைகளை நடாத்துவதற்காக
சர்வதேச கணக்காய்வு
கம்பனி அல்லது
கம்பனிகளின் சேவையினை கொள்முதல் செய்தல் (விடய
இல. 35)
மத்திய
வங்கி திறைசேரி
முறைக்கேடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட
ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இறுதி அறிக்கையின் அடிப்படையில்,
அங்கு குறிப்பிடப்பட்டுள்ள
அம்சங்கள் தொடர்பில்
ஒன்றுக்கொன்று வேறுபட்ட தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு
சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த கணக்காய்வினை மேற்கொள்வதற்கு உகந்த
நிறுவனமொன்றினை தெரிவு செய்வதற்காக ஆலோசனை கொள்முதல்
குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் நிதி மற்றும்
ஊடகத்துறை அமைச்சர்
கௌரவ மங்கள
சமரவீர அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. கிராமிய பாலங்கள் வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இனந்தெரியாத
செலவுகளின் மிகுதியினை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல்
(விடய இல.
38)
கிராமிய
பாலங்கள் வேலைத்திட்டங்களின்
கீழ் மாகாண
மட்டத்தில் தற்காலிக பாலங்கள் 09 இற்கு பகரமாக
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவசியமான இடங்களை தெரிவு
செய்து 15 மேலதிக
பாலங்களை நிர்மாணிப்பது
பொருத்தம் என
தேசிய செயற்பாட்டு
குழு கூட்டத்தின்
போது யோசனையொன்று
முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாகாண
மட்டத்தில் தற்காலிக பாலங்கள் 09 இற்கு பகரமாக
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவசியமான இடங்களை தெரிவு
செய்து வானே
கம்பிகளினால் ஆன 15 மேலதிக பாலங்களை நிர்மாணிப்பது
தொடர்பில் மாகாண
சபைகள், உள்ளுராட்சி
மன்றங்கள் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ பைசல்
முஸ்தபா அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. வேலையற்ற பட்டதாரிகளை கட்டம் கட்டமாக
பயிற்றுவித்தல் (விடய இல. 40)
வேலையற்ற
பட்டதாரிகளுக்கு வேலையினை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை
கருத்திற் கொண்டு
45 வருடத்திற்கு உட்பட்ட விண்ணப்பித்த அனைவருக்கும் வேலையினை
பெற்றுக் கொடுப்பதற்காக
நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள்
2018ம் ஆண்டு
ஜுலை மாதத்திலும்,
15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு
செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில்
அவர்களுக்கு 20,000 கொடுப்பனவினை மாதாந்தம்
வழங்குவதற்கும் தீரர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோர்
2019 ஆண்டில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். அதனடிப்படையில்,
குறித்த பயிற்சிகளை
பெற்றுக் கொடுப்பதற்;கும், பின்னர்
தகைமை பெறுகின்ற
பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் யாப்பின் கீழ்
காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு இணைத்துக்
கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார
விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அழிந்து செல்லும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள்
தொடர்பில் சர்வதேச
வியாபாரம் தொடர்பான
ஒப்பந்தத்தின் (CITES) பங்குதாரர்களின் 18 ஆவது சர்வதேச மாநாட்டிற்கு தலைமை
தாங்குதல் (விடய இல. 41)
ஆழிந்து
செல்லும் அச்சுறுத்தல்களுக்கு
உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள் தொடர்பில்
சர்வதேச வியாபாரம்
தொடர்பான ஒப்பந்தத்தின்
(CITES) பங்குதாரர்களின் 18 ஆவது சர்வதேச
மாநாட்டினை 2019ம் ஆண்டு மே மாதம்
22ம் திகதியிலிருந்து
ஜுன் மாதம்
03ம் திகதி
வரை இலங்கை
நடாத்துவதற்காக தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு
அமைச்சரவை அனுமதி
அளித்துள்ளது. குறித்த மாநாட்டினை கொண்டு நடாத்துவதற்கு
முன்னால் நிலைபேறான
அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சருக்கு
வழங்கப்பட்டிருந்த போதும், 2018-03-28ம் திகதிய 2064/26ம் இலக்க
வர்த்தமானியின் பிரகாரம் அப்பொறுப்பு புத்தசாசன அமைச்சுக்கு
வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த மாநாட்டினை இலங்கையில்
நடாத்துவதற்காக அழிந்து செல்லும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள்
தொடர்பில் சர்வதேச
வியாபாரம் தொடர்பான
ஒப்பந்தத்தின் (CITES) செயலகத்துடன் ஏற்படுத்திக்
கொள்ள உள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில்
கைச்சாத்திடுவது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ
காமினி ஜயவிக்ரம
பேரேரா அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. தென் மாகாணத்தில் பரவி வருகின்ற
இன்புலுவன்ஸா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான துரித நடவடிக்கைகளை எடுத்தல்
(விடய இல.
44)
தென்
மாகாணத்தில் பரவி வருகின்ற இன்புலுவன்ஸா நோய்
தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு
அவசியமான துரித
நடவடிக்கைகளை சுகாதார, போசணை மற்றும் சுதேச
மருத்துவ அமைச்சு
எடுத்து வருகின்றது.
இந்நோயினை அம்
மாகாணத்தினுள் மற்றும் ஏனைய அருகிலுள்ள பிரதேசங்களுக்கும்
பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக
தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு
அவசியமான மேலதிக
மருத்துவ உபகரணங்கள்,
ஏனைய உபகரணங்கள்
மற்றும் வசதிகளை
தாமதிக்காது வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி
அவர்களின் ஆலோசனையின்
பெயரில் வேலை
பார்க்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச
மருத்துவ அமைச்சர்
கௌரவ பைசல்
காசிம் அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ்
பகிர்ந்தளிப்பதற்காக உரத்தினை கொள்முதல்
செய்தல் - 2018 ஜுன் (விடய இல. 45)
அரசாங்கத்தின்
உர மானியத்தின்
கீழ் உரத்தினை
பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு
ஜுன் மாதத்தில்
பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான 6,000 மெட்ரிக்
தொன் மியுரியேட்
ஒப் பொடெஸ்
வகை உரத்தினை
ஒரு மெட்ரிக்
தொன் 311.74 அமெரிக்க டொலர்கள் வீதம், சிங்கப்பூரின்
M/s Velency International Trading (Pvt) Ltd. நிர்வனத்திடம்
இருந்தும், 18,000 மெட்ரிக் தொன்
யூரியா உரத்தினை
ஒரு மெட்ரிக்
தொன் 280.90 அமெரிக்க டொலர்கள் வீதம், அபூதாபியின்;
M/s Agri Commodities and Finance FZE நிர்வனத்திடம்
இருந்தும் கொள்முதல்
மேன்முறையீட்டு சபையின் சிபார்சின் பெயரில் கொள்வனவு
செய்வது தொடர்பில்
விவசாயத் துறை
அமைச்சர் கௌரவ
மஹிந்த அமரவீர
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment