பிரதி
சபாநாயகர் பதவிக்கு
அங்கஜன்
எம்.பியின் பெயர் பரிந்துரை
சிறி லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர்
பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளார் என
அறிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின்.
கூட்டத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்தத் தகவலை
வெளியிட்டுள்ளார்.
பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால, அந்தப் பதவியை விட்டு விலகி, எதிர்க்கட்சி
வரிசையில் அமர்ந்து கொண்டதை அடுத்து, பிரதி சபாநாயகர்
பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.
இந்த நிலையிலேயே, அங்கஜன்
இராமநாதனின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.
0 comments:
Post a Comment