சாய்ந்தமருது வைத்தியசாலையில்
இடம்பெற்ற நிகழ்வுகள்
பழைய நினைவுகள்
சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டாக்டர்
எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்கள் கடமையாற்றியபோது அவரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் அன்று திறம்பட செயல்பட்டு வைத்தியசாலைக்குத்
தேவையான பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வைத்தியசாலை
பொறுப்பதிகாரிக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்புக்களை வழங்கியது.
அந்தவகையில்
சாய்ந்தமருது வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சில
வைபவங்களின் புகைப்படங்களை பழைய நினைவுகளாக இங்கு பதிவேற்றியுள்ளோம்.
இப்படங்களில்
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஞ்சித்
அத்தபத்து
கல்முனைப் பிரதேச கல்வியின் தந்தை
எம்.எஸ்.காரியப்பர்.
முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர்
ஏ.ஆர். மன்சூர்.
அம்பாறை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராகக்
கடமையாற்றிய டாக்டர் ஜெகநாதன்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவராக
இருந்தவரும் ஆங்கிலக் கல்வி அதிகாரியாக கடமையாற்றியவருமான எம்.ஐ.எம்.மீராலெவ்வை.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் செயலாராகக்
கடமையாற்றியவரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஏ.எல்.எம்.முஹைதீன்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர்/பொருளாளராக
இருந்தவரும் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிியவருமான எம்.சீ.ஏ.ஹமீது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபைத்
தலைவராகப் பதவி வகித்த சட்டத்தரணி எம்.எச்.எம்.ஜவ்பர்.
இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட
முஸ்லிம் பெண் ஆசிரியை (சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர்) பாத்துமுத்து ஹலால்தீன்.
மெளலவி செய்ஹ் இப்றாகீம் அவர்கள்,
கவிஞர் ஏ.யூ.எம்.ஏ.கரீம் அவர்கள், யூஸுப் மாஸ்டர் அவர்கள், மருதமுனை பளீல் மெளலானா
அவர்கள், வளர்தோர் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய எம்.எம்.சம்சுதீன் அவர்கள், ஊடகவியலாளர்
ஜமால்தீன் காரியப்பர் அவர்கள்,
மற்றும் சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா,
ஏ.எம்.இப்றாஹீம்,எம்.ஐ.ஏ.பாவா உட்பட இன்னும் பல பிரமுகர்கள் காணப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment