நதிகளின் நீர்மட்டம் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்



முக்கிய நதிகளின் நீர்மட்டம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
விசேடமாக நதிகளின் இருமருங்கிலும் உள்ள பொது மக்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
லக்சபான, மேல் கொத்மலை ,குக்குலே கங்க, பொல்கோல்ல, தெதுறுஓய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் மண்மேடுகள் உடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top