நாடாளுமன்றத்தில்
இன்று ஏற்பட்ட பரபரப்பு!
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 நிமிடங்கள்
லிப்டில் சிக்கியிருந்தாக விமல் வீரவன்ச தெரிவிப்பு
ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த, நாடாளுமன்றக் கட்டடத்
தொகுதியிலுள்ள மின்தூக்கி (லிஃப்ட்) நின்றுவிட்டதால், அதற்குள் சிக்கிக்கொண்டிருந்த
எம்.பிக்கள்,
சுமார் 15 நிமிடங்களுக்குப்
பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து நாடாளுமன்றத்திற்குள்
சில உறுப்பினர்கள்
உயிருக்கு போராடியதாக
சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சிலர் இன்று நாடாளுமன்ற லிப்டில்
சிக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
12 நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கியிருந்தாக
விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றம்
கூடிய போது
விமல் வீரவன்ச
இதனை சபாநாயகரிடம்
குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள்
நாடாளுமன்ற லிப்டில் சிக்கியிருந்தோம்,
அவசர அழைப்பு
மேற்கொண்டு 15 நிமிடங்களாகியது” என விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
அது
குறித்து வருத்தப்படுகின்றேன்..
ஆராய்ந்து பார்க்கின்றேன்
என சபாநாயகர்
கரு ஜயசூரிய
தெரிவித்துள்ளார்.
வருத்தப்பட்டு
சரியாகாது. இன்னும் சற்று நேரமாகியிருந்தால் எமது மூச்சு நின்று போயிருக்கும்
என அவர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச: இன்று நாம், நாடாளுமன்ற
லிஃப்டுக்குள் சிக்கிக்கொண்டோம். அதற்குள்
குறிப்பிடப்பட்டுள்ள அவசர அழைப்பு
இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்ட போதிலும், 15 நிமிடங்களுக்குப்
பின்னரே, நாம்
வெளியேற்றப்பட்டோம்.
சபாநாயகர் கரு ஜயசூரிய: இந்த விடயத்துக்கு
நான் வருந்துகிறேன்.
உடனடியாக, இது
குறித்துத் தேடிப்பார்க்கிறேன்.
விமல் வீரவன்ச:
வருத்தப்பட்டு பிரயோசனமில்லை என்றும் இன்னும் கொஞசநேரம்
தாமதித்திருந்தால், எங்களது மூச்சு
நின்றுபோயிருக்கும்.
தினேஸ் குணவர்தன: நான், 1983ஆம் ஆண்டில்,
நாடாளுமன்றத்துக்கு வந்தே, இப்படியான
சம்பவமொன்றை, இன்று தான், நான் முதன்முறையாக
எதிர்கொண்டேன். எங்களால், லிஃப்டுக்குள் சாகமுடியாது.
சரத் பொன்சேகா: மின்தூக்கியைப்
பயன்படுத்த பயமாக இருந்தால், இனிவரும் நாள்களில்,
படிக்கட்டுகளில் ஏறி வாருங்கள். ஒருமுறையேனும் உடையாத
இயந்திரங்கள் இல்லை.
විමල් - අපි
පාර්ලිමේන්තුවේ ලිෆ්ට් එකේ හිරවෙලා හිටියා, හදිසි ඇමතුම් දීලත් විනාඩි 15ක් ගියා ඇරගන්න
කථානායක - මම
කණගාටුවෙනවා ඒ ගැන, හොයල බලන්නම්
0 comments:
Post a Comment