கார் விபத்து எதிரொலி
சாரதி அனுமதி பத்திரத்தை திருப்பி அளித்தார்
இங்கிலாந்து இளவரசர் பிலிப் (97)
இங்கிலாந்து
இளவரசர் பிலிப்
(97 வயது) கார் விபத்தை
ஏற்படுத்தியதால், தனது சாரதி அனுமதி பத்திரத்தை (driving license) திருப்பி அளித்துள்ளார்.
இங்கிலாந்து
ராணி இரண்டாம்
எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச்
சென்ற கார்
மற்றொரு கார்
மீது மோதி
விபத்துக்குள்ளானது.
இதில்
இளவரசர் பிலிப்
காயமின்றி உயிர்
தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை
ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது
தோழியும் காயம்
அடைந்தார்.
மணிக்கட்டு
உடைந்த அந்த
பெண், விபத்து
தொடர்பாக இளவரசர்
தன்னிடம் மன்னிப்பு
கூட கேட்கவில்லை
என வேதனை
தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு
இருப்பது உறுதி
செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி
இருக்கும் என்றும்
கூறினார். இதற்கிடையே,
விபத்தில் பாதிக்கப்பட்ட
அந்த பெண்ணிடம்
இளவரசர் பிலிப்
மன்னிப்பு கோரி
கடிதம் எழுதினார்.
இந்நிலையில்,
இளவரசர் பிலிப்
நேற்று தனது
சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸ் நிலையத்தில் திருப்பி
அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment