தேசிய அரசாங்கம் அமைந்தாலும்
புதிதாக அமைச்சர்களை நியமிக்க மாட்டேன்
ஜனாதிபதி திட்டவட்டம்
ஐக்கிய
தேசிய முன்னணியும்
சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கம் தொடர்பான
யோசனையை நிறைவேற்றினாலும்
தான் புதிதாக
அமைச்சரவை அந்தஸ்துள்ள
அமைச்சர்களை நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்
தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ தலைமையில்,
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த
போதே அவர்
இதனை கூறியுள்ளார்.
இது
சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான
நிலைமை தொடர்பில்
ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும்
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய
அரசாங்கம் அல்லது
எந்த அரசாங்கமாக
இருந்தாலும் அமைச்சரவை அந்தஸ்துள்ளமை அமைச்சர்களை நியமிப்பது
தொடர்பில் அரசியலமைப்புச்
சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம்
உள்ளது.
இதனால்,
இந்த விடயத்தில்
வெளியாரின் தலையீடுகளுக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி
திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment