அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையின்போது

தூங்கி வழிந்த சிறுவன்

- இணையதளத்தில் குவியும் பாராட்டு

   
அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது தூங்கி கொண்டிருந்த ஜோசுவா டிரம்ப்க்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்க பாடசாலை  ஒன்றில் ஜோசுவா டிரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான்.

அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த பிரச்சினையால் அந்த சிறுவனையே பாடசாலை நிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.

இந்த சிறுவன் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கவனத்துக்கும் இது வந்தது.

அமெரிக்க ஜனாதியதி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைக்கலாம். அதன்படி ஜனாதிபதி  டிரம்ப் தனது மனைவி உள்பட 13 பேரை அழைத்திருந்தார்.

அதில், சிறுவன் ஜோசுவா டிரம்பும் ஒருவன். சக மாணவர்கள் கேலி- கிண்டலால் பாதிக்கப்பட்டு இருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை டிரம்ப் அழைத்திருந்தார்.

பாராளுமன்றத்தில் டிரம்ப் தீவிரமாக உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஆனால், அந்த சிறுவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. தனது இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.

இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.

டிரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் தூங்கி விட்டான் எனவும், டிரம்ப் உரை தூங்குவதற்குத்தான் உதவும் என்று பலவாறு கிண்டலடித்து அந்த படத்துக்கு கருத்து கூறி தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் டிரம்ப் உரையின் போது தூங்கியதற்கான அந்த சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக தற்போது மாறி இருக்கிறது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top